WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 31, 2026

'டெட்' பாடத்திட்டம் ஆசிரியர்கள் அதிர்ச்சி.

 

'டெட்' பாடத்திட்டம், ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் பாடத்திட்டத்தை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், ஆசிரியராக பணியாற்ற, 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த சூழலில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என, கடந்த ஆண்டு செப்., 1ம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக, சிறப்பு 'டெட்' தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வரும் டிச., 20ம் தேதி, சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கான, 'டெட்' முதல் தாள் தேர்வு, தமிழகத்தில், ஒன்று முதல், மூன்றாம் வகுப்பு வரையிலான, புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான, 'டெட்' இரண்டாம் தாள் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் பாடத்திற்கான, பாடதிட்டம் தவிர்த்து, மற்ற பாடத்திட்டங்கள் அனைத்தும், ஆங்கிலத்திலேயே வெளியிடப்பட்டுள்ளன. இது, ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறுகையில், “மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்த பாடத்திட்டமே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் பாடதிட்டம் வெளியிடுவது தொடர்பாக, உரிய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.