WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 10, 2014

ஸ்காலர்ஷிப் சிறப்பு கல்விச் செய்திகள்(UPDATE ON 29/04/14)



 ஸ்காலர்ஷிப் சிறப்பு கல்விச் செய்திகள்





1.பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உதவி தொகையுடன் டிப்ளமோ படிப்பு





மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 1 வருட டிப்ளமோ படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
படிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவிதொகை மற்றும் தங்குமிடம் வழங்கப்படும். தகுதியானவர்கள் விண்ணபிக்கவும்.
படிப்பின் பெயர்: Diploma in Radiological Physics (1 வருடம்)
கல்விக்கட்டணம்: ரூ.3000
வயது: 26 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடம் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: இயற்பியல் பாடப்பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி மற்றும் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் எழுத்து தேர்வு தொடர்பான விபரங்கள் தகுதியானவர்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கப்படும்.
படிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.9,300 உதவித்தொகை மற்றும் தங்குமிட வசதி செய்து தரப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200.
கல்வித்தகுதி, ஜாதி, பணி  அனுபவம், வயது, உடல் ஊனம் போன்ற தேவையான சான்றுகளின் அட்டஸ்ட் செய்யப்பட்ட நகல்கள் விண்ணப்பக் கவரின் மீது குறிப்பிடவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Deputy Establishment Officer, (R-11), Research Centre, Trombay, Mumbai-400 085.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 21.


2.சென்னை கணித நிலையத்தில் உதவித்தொகையுடன் பட்டப்படிப்பு



சென்னையில் உள்ள Chennai Mathematical Institute -ல் நடைபெறும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர்ச் சேர்க்கை நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடைபெற உள்ளது. தகுதியானவர்கள் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
படிப்பின் பெயர்: ஒருகிணைந்த பட்டப்படிப்புகள்
பி.எஸ்சி (Hons) கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் (3 வருடம்)
பி.எஸ்சி (Hons) கணிதம் மற்றும் இயற்பியல்
தகுதி: 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்.எஸ்சி (கணிதம்)., தகுதி: பி.எஸ்சி (கணிதம்) முடித்திருக்க வேண்டும்.
வழங்கப்படும் படிப்பு குறித்த விரிவான தகவல்களுக்கு www/manit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் மே 15.
தேர்வு நடைபெறும் மையங்கள்: அகடதாபாத், அலகாபாத், பெங்களூர், புவனேஸ்வர், கோழிகோடு, சென்னை, கோவை, தில்லி, குவகாத்தி, ஹைதராபாத், இம்பால், கொல்கத்தா, மதுரை, மும்பை, நாக்பூர், பாட்னா, புனே, ராஞ்சி, ஷில்லாங், ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம்.
அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் www.cmi.ac.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது CMI கல்வி நிலையத்திற்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பி விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
முழு விபரங்களுக்கு www.cmi.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

3.ஹார்மிஸ் அறக்கட்டளை வழங்கும் உதவித்தொகை

                                         புகைப்படங்கள்
ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளை 100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது.
கேரளா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலத்தில் இருந்து தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து உதவித்தொகை வழ்ங்கப்படுகிறது.
2013-14 கல்வியாண்டில், பேடரல் வங்கியின் நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் நினைவாகபொது அறக்கட்டளையின் சார்ப்பில் ஆண்டு தோறும் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
அந்த வகையில், இந்தாண்டு மெரிட் முறையில் மருத்துவம், பொறியியல், விவசாயம், நர்சிங் மற்றும் மேலாண்மை படிப்பு படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து உதவித்தொகை வழங்குப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் 20 பேரை தேர்வு செய்து ஹார்மிஸ் உதவித்தொகை வழங்கப்படும். சிறப்பு பிரிவினருக்கும் உதவித்தொகை உண்டு.
வங்கி இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உதவித்தொகை குறித்த விரிவான தகவல்களுக்கு www.federalbank.co.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

4.வேதியியல் துறையில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்பு


                     
பெங்களூரிலுள்ள ஜவகர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வேதியியல் துறை சார்ந்த கோடைகால ஆராய்ச்சி பணிகளுக்கு இளங்கலை வேதியியல் முதலாமாண்டு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Felowship
ஆராய்ச்சி திட்டத்தின்: Project Oriented Chemical Education
கல்வித்தகுதி: வேதியியல் பாடத்தில் பி.எஸ்சி முதலாண்மாண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை; நேர்முகத்தேர்வு முலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஏப்ரல் மாதம் முதல் வாரம் நேர்முகத்தேர்வு நடைபெறும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கோடைவிடுமுறை காலங்களில் 6 முதல் 8 வாரப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். பயிற்சியின் போது வேதியியல் துறை சார்ந்த ஆராய்ச்சி பணியில் ஈடுபட வேண்டும். மாதம் ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படும். தொடர்ந்து மூன்று வருட கோடைகால விடுமுறையில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட வேண்டும். சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு Diploma in Chemistry சான்றிதழ் தரப்படும். வேதியியல் துறையில் எம்.எஸ்., பிஎச்.டி படிப்பில் சேர்ந்து மேற்படிப்பை தொடரலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.jncasr.ac.in/fe என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பவும். கூடுதல் விபரங்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளவும்.
பிப்.,17ம் தேதி முதல் பிப்.,24ம் தேதி வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் சென்றடைய கடைசி நாள் மார்ச் 03.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை The Co-ordinator. Fellowships & Extension Programmes, Jawaharlal nehru Centre For Advanced Scietific Research, Jakkur (PO), Bangalore - 560 064 என்ற முகவரிக்கு அனுப்பலாம்


5.எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித் தொகை உயர்வு

     
        .
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித்தொகை திட்ட நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ.936 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய உரை:
2013-14-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.396 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடு ரூ.936 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் பயனை தனியார் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்திய அரசின் முடிவு, கல்விப் புரட்சியை ஏற்படுத்தியதோடு, இந்த மாணவர்களையும் உயர்கல்வி நீரோட்டத்திற்குள் கொண்டுவந்துள்ளது.
சமுதாயத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பிரிவுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு புதியதொரு வாய்ப்பை வழங்கியிருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன்.
இது தவிர, இந்த மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்தி, அவர்கள் கல்வி பயில்வதற்கு நல்ல சூழலை ஏற்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் மன நிறைவை அளிக்கிறது.
                   

6.வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு



வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி:-
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்த தகுதியான பதிவுதாரர்கள் சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும். பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த பதிவுதாரர்கள் நந்தனத்தில் தொழில் திறனற்றோருக்கான வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.
2013 டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியானவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்தவர்கள் கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். அவர்களுக்கு கல்வித் தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு இல்லை.
தகுதியுடைய பதிவுதாரர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் ஓராண்டு நிறைவடைந்தவர்கள், சுய உறுதிமொழி ஆவணத்துடன், பதிவு எண் மற்றும் உதவித் தொகை எண் ஆகியவற்றை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.