WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 25, 2014

தமிழகம் முழுவதும்100 அம்மா மருந்தகம்




சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 100 அம்மா மருந்தகங்களை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஜூன் 26) திறந்து வைக்கிறார். அதில், சென்னையில் 20 மருந்தகங்களும் பிற மாவட்டங்களில் 80 மருந்தகங்களும் அடங்கும். தமிழகத்தில் மலிவு விலையில் கூட்டுறவு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த மருந்தகங்களில் மருந்துகளை வாங்குவோருக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மருந்தகங்களுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பைத் தொடர்ந்து, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. மாநிலம் முழுவதும் மேலும் 100 அம்மா மருந்தகங்களைத் திறக்க திட்டமிடப்பட்டது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கென ரூ.20 கோடி மாநில விலை நிலைப்படுத்தும் நிதியத்தில் இருந்து பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் கூட்டுறவுத் துறை நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, சென்னையில் கூடுதலாக 20 மருந்தகங்களும் பிற மாவட்டங்களில் 80 மருந்தகங்களையும் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைக்கவுள்ளதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆங்கில மருந்துகள் கிடைக்கும்: கூடுதலாக திறக்கப்படும் அம்மா மருந்தகங்களில் ஆங்கில மருந்துகள் கிடைக்கும் எனவும், ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 10 சதவீத தள்ளுபடி கூடுதலாகத் திறக்கப்படும் மருந்தகங்களிலும் அளிக்கப்படும் என கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.