புதுடெல்லி, ஜூன் 30;
தமிழகத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 83 பேர் தேர்ச்சி பெற்றாது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதை உறுதி செய்ததுடன் 83 பேரின் தேர்வையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து தேர்வு செய்யப்பட்டவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
Then what about their Postings and services
ReplyDelete