சென்னை, அண்ணா பல்கலையில், பி.இ., சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு, இன்று துவங்க இருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில், இன்று முதல் நடக்க இருந்த பொதுப்பிரிவு கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக, அண்ணா பல்கலை, நேற்றிரவு அறிவித்தது. ''கலந்தாய்வு துவங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்,'' என, பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ
் More News apls visit www.kalvikkuyil.blogspot.com அறிவித்துள்ளார்.விளையாட்டு, மாற்றுத் திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, ஏற்கனவே முடிந்த நிலையில், அதிக மாணவர்கள் பங்கேற்கும் பொதுப்பிரிவு கலந்தாய்வு, அண்ணா பல்கலையில், இன்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்றைய கலந்தாய்வில் பங்கேற்க இருந்த, 3,000 பேருக்கு, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பல மாணவர்கள், நேற்றிரவே, சென்னை வந்து சேர்ந்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.