உலக கின்னஸ் சாதனை முயற்சிக்காக 80 இலக்க எண் வரிசையை 75 நொடிகளில் கழித்து விடையளித்தார் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர். திருச்சி கிராப்பட்டியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் எஸ். வடிவேலனின் மகன் எஸ்.வி. பிரவீன். பிஷப் ஹீபர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூன் 27ஆம் தேதி ஒரு லட்சம் ஆண்டுகளின் விவரங்களை கேட்ட நொடிப் பொழுதில் சொல்லி லிம்கா கின்னஸ் சாதனையை முறியடித்தார். இதன் தொடர்ச்சியாக, பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 70 இலக்கங்கள் மற்றும் 80 இலக்க எண் வரிசையை சில
visit more News at www.kalvikkuyil.blogspot.com மணித்துளிகளில் கழித்தும், 5 இலக்க எண் வரிசையை சில மணித்துளிகளில் பெருக்கியும் சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இதில் குறிப்பாக 70 இலக்க எண் வரிசையை 55.31 நொடிகளில் கழித்து விடை கூறினார். ஏற்கெனவே ஆந்திரத்தைச் சேர்ந்த சாய்கிரன் என்ற மாணவர் 60 நொடிகளில் விடையளித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். இதனை தற்போது பிரவீன் முறியடித்திருக்கிறார். தொடர்ந்து 80 இலக்க எண் வரிசையை 75 நொடிகளில் கழித்தார் பிரவீன். 80 இலக்கத்தில் இதுவரை எந்தச் சாதனையும் பதிவாகவில்லை. இதையடுத்து சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு, 5 இலக்க எண் வரிசையை பெருக்கிச் சொல்லத் தொடங்கினார். இதில், ஒரு முறை 22.25 நொடிகளிலும், ஒரு முறை 15.43 நொடிகளிலும் அவர் விடையளித்தார். இந்தச் சாதனை முயற்சியை பிஷப் ஹீபர் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் விஜயன் கனகராஜ், சர்வதேச வெளித்தொடர்பு புலத் தலைவர் காட்வின் பிரேம்சிங் ஆகியோர் நடுவர்களாக இருந்து கண்காணித்தனர். நிகழ்வுகளுக்கான விடியோ பதிவு, நடுவர்களின் அறிக்கையுடன் உலக கின்னஸ் சாதனை புத்தகத்துக்கும், லிம்கா சாதனைப் புத்தகத்துக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரவீனின் தந்தை வடிவேலன் தெரிவித்தார். வழக்கமான கணக்கு முறைகளைத் தாண்டி, வேதக் கணித முறைப்படி தொடர் பயிற்சி மேற்கொண்டு இந்தச் சாதனையை நிறைவேற்றியதாக மாணவர் பிரவீன் தெரிவித்தார்.
Hi good noon to all any news about pg trb case
ReplyDeleteHi spl tet case for revaluvation answer Key news going on raj news any body knows more detaiks pls share it
ReplyDeleteMr.bharathi sir if u known above case details
ReplyDelete