நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார். நடப்பு கல்வியாண்டில் இதுவரை இல்லாத வகையில் ஆண்டு தொடக்கத்திலேயே மாணவ–மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் வகையில் 2014–2015ஆம் ஆண்டில் 230 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 2,86,400 மாணவர்கள் மற்றும் 3,57,600 மாணவிகள் என மொத்தம் 6,44,000 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் ஜெயலலிதா 7 மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். மிதிவண்டிகளைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்கு சென்று வர மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.