WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Showing posts with label edu news. Show all posts
Showing posts with label edu news. Show all posts

Sunday, February 12, 2023

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்: மாநில திட்டக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கையில் பரிந்துரை.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கினார்.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களின் விவரம்: இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், சேலம், திருவாரூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் 362 பள்ளிகள், 679 தன்னார்வலர்கள், 362 தலைமை ஆசிரியர்கள், 362 ஆசிரியர்கள், 724 பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. திட்டம் தொடர்பாக பெற்றோர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 98 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், மையங்களுக்கு சென்றபின் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் அதிகரித்துள்ளது. வீட்டு வேலைகளிலும் உதவிகள் செய்வதுடன், செல்போன் பயன்பாடும் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். பாடப்புத்தகங்களை தாண்டி வெளி நிகழ்வுகள் குறித்து படிக்கவும் மாணவர்களுக்கு ஆர்வம் வந்துள்ளது.
இல்லம் தேடி மையங்களின் எளிய கற்றல் வழிமுறைகள மாணவர்களிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதிகளில் மாணவர் வருகைப்பதிவு குறைவாக இருப்பதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர். இவற்றில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் சிறந்த இந்த இல்லம் தேடி கல்வி மைய திட்டத்தை தொடர வேண்டும் என்பதே பெரும்பாலான தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது. இல்லம் தேடி கல்வி மையம் மாணவர்களுக்கான கற் றல் இழப்பை சரிசெய்வதற்கான பாலமாக செயல்பட்டுள்ளது. இதை ஒரு சமூக இயக்கமாக மாற்றவேண்டியது அவசியம். கடந்த ஓராண்டில் இந்த திட்டம் உருவாக்கிய மாற்றம் மிகப் பெரியது. அது தொடர்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

Tuesday, July 5, 2016

புதிய கல்விக் கொள்கைக்காக கருத்து கேட்பு: கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தல்.

புதிய கல்விக் கொள்கை முன்மொழிவு மீது கருத்து கோட்புக்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை முன்மொழிவு குறித்து கருத்துகளைத் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் மிகக் குறைவாகும். இந்த முன்மொழிவை அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட்டு, அதன் மீது கருத்துத் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். முன்மொழிவில் சில அம்சங்கள், மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துகொள்வதாக அமைந்துள்ளன. குழந்தைகளின் எதிர்காலம் குறித்த மிக முக்கிய கொள்கை ஆவணம் என்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, June 28, 2015

Wednesday, March 18, 2015

அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் வாபஸ்.

தமிழக அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பார்வையற்ற பட்டதாரிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் பணி நியமனம், வேலைக்காக காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னை, திருச்சியில் 10வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், பார்வையற்ற பட்டதாரிகளுடன் வீரமணி, பழனியப்பன், வளர்மதி ஆகிய மூன்று தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 9 கோரிக்கைகளில் பள்ளி, கல்லூரிகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, வேலையில்லா பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவித்தொகையை அதிகரிப்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதனால், பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.