WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, March 16, 2015

கல்வியறிவில், தேசிய சராசரிக்கும் குறைவாகவே பழங்குடியினர் நிலை: பார்லிமென்ட் குழு.

கல்வியறிவில், தேசிய சராசரிக்கும் குறைவாகவே பழங்குடியினர் உள்ளனர்
என, பார்லிமென்ட் குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: கடந்த, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேசிய கல்வியறிவு விகிதம் 73 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், பழங்குடியினரின் கல்வியறிவு 59 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. கடந்த 1961ம் ஆண்டு, இதர வகுப்பினருடன் ஒப்பிடும்போது, கல்வி அறிவு பெறாத பழங்குடியினரின் பங்கு, 19.77 சதவீதமாக இருந்தது. இது, 2011ம் ஆண்டு, 14.03 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேகாலயா, மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில், கல்வியறிவில், பெரும்பாலான பழங்குடி யினர், இதர வகுப்பினருக்கு நிகராக உள்ளனர். தமிழகம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், பழங்குடியினர் குறைவாக உள்ளபோதிலும், இதர வகுப்பினரின் கல்வியறிவு விகிதத்துடன் ஒப்பிடும்போது, 18 - 26 சதவீதம் என்ற அளவில் அதிகமாக உள்ளது. இதைக் குறைக்க, அம்மாநிலங்கள் செயல்திட்டம் வகுக்க வேண்டும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் உள்ள, பழங்குடியினருக்கான ஆசிரம பள்ளிகள் குறித்த முழு விவரங்கள் இல்லை என, பழங்குடியினர் நல அமைச்சகம் தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது. அத்தகவல்களை அவை திரட்டி வழங்க வேண்டும். ஆசிரம பள்ளிகளில், பழங்குடியின மாணவர்களுக்கு, தரக்குறைவான, மோசமான உணவு வழங்கப்படுவதாக புகார்கள் உள்ளன. அவை குறித்து, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவை நடவடிக்கை எடுக்குமாறு, பழங்குடியினர் நல அமைச்சகம் உத்தரவிட வேண்டும். ஆசிரம பள்ளி மாணவர்களுக்கு நல்ல தரமான உணவு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பொருட்களை வழங்க வேண்டும். பழங்குடியினர் தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் வந்த புகார்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செயல்படுத்திய மற்றும் தேங்கியுள்ள திட்டங்கள் ஆகிய அனைத்து விவரங்களையும், பழங்குடியினர் நல அமைச்சகம் வழங்க வேண்டும். ஆசிரம பள்ளிகள் மற்றும் பழங்குடியினரின் கல்வி மேம்பாடு தொடர்பாக பேராசிரியர் தோரட் குழு அறிக்கையை, அமைச்சகம் செயல்படுத்த வேண்டும். பழங்குடியினர் கல்வி அறிவில் இதர வகுப்பினருக்கு நிகராக உயர வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தங்கும் விடுதி வசதிகளுடன், ஆசிரம பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. இந்த நோக்கத்தை, மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.