வெளிநாடுகளில் படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சீர்மரபினர்,
நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள், பாரம்பரிய இனத்தைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறது மத்திய சமூக நீதி அமைச்சகம்.
வெளிநாடுகளில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்கேற்ற படிப்புத் திறனும் திறமைகளும் இருக்கும். ஆனால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிப்பதற்குத் தேவையான நிதி வசதி இருக்காது. வங்கிக் கடன் வாங்கிப் படிக்கச் செல்லலாம். அதேசமயம், அதற்கு உத்தரவாதமாகக் காட்ட அசையாச் சொத்து இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி கை தூக்கி விடக் காத்திருக்கிறது மத்திய சமூக நீதி அமைச்சகம்.
தாழ்த்தப்பட்ட, சீர்மரபு நாடோடி பழங்குடியினர் (Denotified Normadic and Semi-Normadic Tribes) மற்றும் நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்கள், பாரம்பரியக் கலைஞர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்போ அல்லது பி.எச்டி. ஆய்வுப் படிப்போ படிக்க விரும்பினால், அதற்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறது மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.