WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 27, 2014

புளூடூத் மூலம் கல்லூரி தேர்வில் முறைகேடு செய்த மாணவன் சிக்கினான்

மேற்கு வங்காளத்தில் தலைமுடிக்குள் புளூடூத்தை மறைத்து வைத்து அதன்மூலம் தேர்வில் முறைகேடு செய்த கல்லூரி மாணவன் பிடிபட்டான். பிர்பம் மாவட்டம் சூரியில் உள்ள வித்யாசாகர் கல்லூரியில் நேற்று தேர்வு நடைபெற்றது. பி.ஏ. தத்துவவியல் முதலாமாண்டு மாணவரான ரபிகுர் இஸ்லாம், தலையில் விக் அணிந்து தேர்வெழுத வந்திருந்தார். அமைதியாக இருந்த தேர்வறையில் அவர் யாருடனோ பேசுவதுபோன்ற அசைவுகள் தென்பட்டன. அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கல்லூரி முதல்வர், மாணவனை சோதனை செய்தார். அப்போது தலையில் அவனது மொபைல் போனுடன் இணைக்கப்பட்ட புளூடூத் டிவைஸ் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த மாணவன் புளூடூத் மூலம் மற்றொரு நபரிடம் இருந்து விடைகளை பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவன் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டான்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.