டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு:
வரும், 20ம் தேதி, குரூப் 1 நிலையில், 79 காலி பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடக்கிறது. இதற்கு, 1.65 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். சரியான முறையில் விண்ணப்பித்து, தேர்வு கட்டணம் செலுத்தியவர்களின் பெயர் பட்டியல், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல், வரும், 27ம் தேதி, 98, உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடக்கிறது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பெயர் பட்டியலும், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 'தங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா' என்பதை, இணையதளத்தில் பார்த்து, விண்ணப்பதாரர்கள் உறுதி செய்து கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பித்து, தேர்வு கட்டணம் செலுத்தியும், பெயர் இல்லை எனில், உரிய ஆதாரங்களுடன், contacttnpsc@gmail.com என்ற, இமெயில் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.