சென்னை:
அண்ணா பல்கலையில், பி.இ., கலந்தாய்வு நாளை துவங்குகிறது. புதிதாக இரண்டு பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த மாதம், 27ம் தேதி, பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்க இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு காரணமாக கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க, ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு) அமைப்பிற்கு, கால தாமதம் ஏற்பட்டதால், கூடுதல் கால அவகாசம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தது. இதை ஏற்று, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழகத்தில், பி.இ., கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது. தமிழக கல்லூரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி அளித்தபின், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலை, இணைப்பு அங்கீகாரம் வழங்கியது.கோவை, பி.எஸ்.ஜி., கல்லூரி, பழநி, அறிஞர் அண்ணா தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய, இரு கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலை, இணைப்பு அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி, நாளை காலை 10:00 மணிக்கு, பல்கலை வளாகத்தில், பி.இ., பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்குகிறது. நாளை 3,000 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் பல்கலை நிர்வாகம் செய்துள்ள து.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.