WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 31, 2014

'நடப்பாண்டில் 300 பள்ளிகள் தரம் உயர்வு'

 ''நடப்பாண்டில், 300 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.



சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

25 மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரின், 128 குடியிருப்புப் பகுதிகளில், 128 துவக்கப் பள்ளிகள் துவக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவர். பள்ளிக்கு, சத்துணவு சமையலறை, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 19.43 கோடி ரூபாய் செலவாகும்.

19 மாவட்டங்களில் உள்ள, 42 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு, தலா, மூன்று பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு பள்ளிக்கும், மூன்று கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். இதற்கு, ஆண்டுக்கு, 9.28 கோடி ரூபாய் செலவாகும்.

நடப்பு கல்வியாண்டில், 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக, தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு, தலா ஒரு தலைமை ஆசிரியர், ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதன்மூலம், 1.20 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவு ஏற்படும்.

மேல்நிலைப் பள்ளிகளாக, தரம் உயர்த்தப்பட்ட, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

நடப்பாண்டில், 100 மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

இப்பள்ளிகளுக்கு, 100 தலைமையாசிரியர்கள், 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 31.82 கோடி செலவாகும்.

விபத்தில் பெற்றோர் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் ஏற்பட்டாலோ, அவர்களின் குழந்தைகளை, பிளஸ் 2 வரை படிக்க வைக்க, அரசு டிபாசிட் செய்யும், 50 ஆயிரம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
2,057 பள்ளிகளின் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
1 முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கையெழுத்து பயிற்சி ஏடுகள்; 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஓவியப் பயிற்சி ஏடுகள்; 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள், இலவசமாக வழங்கப்படும்.
நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஐந்து உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும். இவற்றுக்கு, ஐந்து முழுநேர ஆசிரியர்களும், மூன்று பகுதி நேர ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர்.
துவக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, 72.90 கோடி ரூபாயில், 1,175 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10, பிளஸ் ? மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, நாட்காட்டியுடன் கூடிய குறிப்பேடு வழங்கப்படும்.
இவ்வாறு, ஜெயலலிதா அறிவித்தார்.www.kalvikkuyil.blogspot.com

1 comment:

  1. CM ANNOUNCEMENT EXPECTED TODAY OR TOMORROW BEFORE PUBLICATION OF SELECTION LIST BY TRB FOR TET:

    Counter report(proper reply) by our honourable present CM about Edn dept + SGT vacant issue raised by former CM Kalaignar & Veeramani. - in ongoing assembly within fee days.

    Along with that following announcements r expected by various wings of edn dept.

    (New primary schls, upgrade announcement of high & higher sec schls + various new schemes already announced yesterday)

    1. Present appointment count of
    TET PAPER 1 announcement & its notification from trb.
    (not yet officially declared by tn govt or trb. Though around 4000 count for paper 1 is flashed by sun news, puthiya thalaimurai, we should get the same as official news.)

    2. Present appointment count of
    TET PAPER 2 + additional vacancy + other dept vacancy announcement & its notification by trb.

    (Though many paper news & old official announcement says the count for paper 2 is 10,726 - it would be 'some what increased' to satisfy 42,000 passed tchrs by mentioning 2013-14 count or other dept vacancy excluding schl edn dept. Since the 5% relaxation not given beneficial to most of 42,000 passed paper 2 candidates - some more increase in vacancy is highly expected by all )

    3. 'Separate backlog vacancy announcement' for appointing 'ALL OR MAXIMUM PH TET CANDIDATES' passed via Special TET out of 933+ PAPER 2 candidates & its notification from trb.

    (777 B GRADE - PG + PAPER 2,
    330 C GRADE - SGT PAPER 1 vacancy available for PH. & VISUAL candidates alone in trb as backlog from 2007 upto now. Regarding this proper G.O passed by tn govt to fill around 2000 backlog vacancy of PH candidates in all dept as per High court directions by mar 2014 after the announcement of spl tet. PH & VISUAL associations approached tn govt & many spl tet candidates requested via CM SPECIAL CELL online & in person - to appoint all or maximum spl tet candidates under humanitarian condition as this govt considered spl tet exam with mother-hearted. Since spl tet conducted separately after many claims by visual candidates - most of pwd candidates expecting separate notification for spl tet & maximum appointment from available old backlog vacancy for ph alone in trb)

    After all this - Appointment for all PG, TET, SPECIAL TET in the hands of CM expected soon within August as announced by edn minister in assembly already.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.