செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் அதன் 75 சதவீத பயணத்தை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 5ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலமானது 300 நாள்களில் இதுவரை 510 மில்லியன் கி.மீ தூரம் பயணித்துள்ளது. இந்த விண்கலத்தை அதன் புவி வட்டப்பாதையில் சீராகச் செல்ல வைக்கும் விதமாக, கடந்த மாதம் 11ஆம் தேதி சில மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டன. அடுத்த கட்டப் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன. செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி இந்த விண்கலமானது செவ்வாய்க் கிரகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கபடுகிறது.
Saturday, July 5, 2014
75% பயணத்தை நிறைவு செய்தது "மங்கள்யான்'
செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் அதன் 75 சதவீத பயணத்தை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 5ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலமானது 300 நாள்களில் இதுவரை 510 மில்லியன் கி.மீ தூரம் பயணித்துள்ளது. இந்த விண்கலத்தை அதன் புவி வட்டப்பாதையில் சீராகச் செல்ல வைக்கும் விதமாக, கடந்த மாதம் 11ஆம் தேதி சில மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டன. அடுத்த கட்டப் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன. செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி இந்த விண்கலமானது செவ்வாய்க் கிரகத்தை சென்றடையும் என எதிர்பார்க்கபடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.