WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 2, 2014

83 பேரை 'டிஸ்மிஸ்' செய்வது எளிதல்ல: டி.என்.பி.எஸ்.சி.,

சென்னை : டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்),


குரூப்1 மூலம் தேர்வு பெற்ற, 83 பேரின் பணி நியமனம் செல்லாது' என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், 83 பேரின் பணி நியமனம் ரத்து செய்யப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரம் கூறியதாவது: எழுத்து தேர்வில், குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு, மதிப்பெண் அளிப்பதில் தாராளம் காட்டப்பட்டது என்பது தான் குற்றச்சாட்டு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படலாம். அதன்மீது விசாரணை நடந்து தீர்ப்பு வர வேண்டும்.அப்படி, மறு ஆய்வு மனு மீதும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்படும்.அப்போது, 83 பேரையும், 'டிஸ்மிஸ்' செய்வது குறித்த அரசாணையை, தமிழக அரசு வெளியிட வேண்டும். அப்போது தான், 83 பேரையும், பணி நீக்கம் செய்ய முடியும். 83 பேரும், தற்போது, ஒன்று, இரண்டு பதவி உயர்வு பெற்று, உயர் அதிகாரிகளாக உள்ளனர்.எனவே, 83 பேரையும், 'டிஸ்மிஸ்' செய்வது என்பது எளிதான காரியம் கிடையாது. இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.