திருப்பூர் :
"தொற்று நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை கண்காணிப்பு பணியில், வட்டார ஒருங்கிணைப்பாளராக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,'
என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஆதார மையம் சார்பில், தொற்றுநோய் சிகிச்சை கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தொற்றா நோய் சிகிச்சை அளிக்கப்படுவதை கண்காணிக்க, வட்டார அளவில் ஓராண்டுக்கு பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 கல்வித்தேர்ச்சியுடன், சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிப்பதில், குறைந்தபட்சம் மூன்று ஆண்டு அனுபவம் உள்ளவர்கள், போதுமான கம்ப்யூட்டர் அறிவு பெற்றவர்கள், சமுதாய வள பயிற்றுனர் அல்லது சமூக பயிற்றுனராக, மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்கள், 23 முதல் 40 வயதுக்குள் உள்ளவர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட உள்ளனர். மாதம் 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். மாவட்ட அளவில் இரண்டு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட இயக்குனரிடம், வரும் 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முக தேர்வு வரும் 15ம் தேதி நடக்கும். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.