தமிழக அரசில் பணியாற்றும், 83 அதிகாரிகளை, பணிநீக்கம் செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பதிலளிக்க, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை, உள்ளகரத்தை சேர்ந்த செல்வராஜ் செல்லையன் என்பவர், தாக்கல் செய்த மனு:
குரூப் 1 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட, 83 பேரின் நியமனத்தை, சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2011, மார்ச் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, அதிகாரிகள் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அப்பீல் மனு, கடந்த மாதம், 30ம் தேதி, தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த அதிகாரிகள், கோப்புகளில் கையெழுத்திடவும், நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தொடர்ந்து அனுமதிக்கப்படுகின்றனர்.எனவே, 83 அதிகாரிகளை பணியில் நீடிக்கவும், கோப்புகளில் கையெழுத்திடவும், தடை விதிக்க வேண்டும். எந்த அடிப்படையில், இவர்கள் பணியில் தொடர்கின்றனர் என்பதற்கு விளக்கம் அளிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவர்களை, பணிநீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இம்மனு, நீதிபதி ராமநாதன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, ஒரு வாரத்தில் பதிலளிக்கும் படி, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி ராமநாதன் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.