WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 5, 2014

பல்கலை. பேராசிரியர் பணி நியமனங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் நியமன அறிவிப்புகளை ரத்து செய்யக் கோரும் மனுக்களை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி., உயர்நிலை மற்றும் கடைநிலை ஊழியர் சங்கச் செயலர் பார்த்தசாரதி மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். அதில் ஒரு மனுவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 9 உதவிப் பேராசிரியர்கள், 17 இணைப் பேராசிரியர்களின் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 2014 ஜனவரி 22இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே, அந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, காலி பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு மனுவில், வணிகவியல் துறைப் பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப 2013 ஆகஸ்ட் 21இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட வேண்டிய இந்த பணியிடத்தை, பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கியது நியாயமற்றது. இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் வெ. சுப்பிரமணியன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: பணி நியமனம் தொடர்பான விஷயத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தது சரியல்ல. இருந்தபோதும், பல்கலைக்கழகம் தாக்கல் செய்துள்ள ஆவணங்களைப் பார்த்தபோது, பணியிடங்களை நிரப்பும் தேர்வுகள் முறையாக நடைபெற்று வருவது தெரிகிறது. எனவே, 9 உதவிப் பேராசிரியர்கள், 17 இணைப் பேராசிரியர்கள் பணி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வணிகவியல் துறைப் பேராசிரியர் பணி நியமனத்தை பொறுத்தமட்டில், அடுத்த முறை தாழ்த்தப்பட்டோருக்கு பேராசிரியர் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நீதிமன்றம் பதிவு செய்து கொள்கிறது. எனவே, இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.