மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இருட்டறை உதவியாளர் பணியிடங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இருட்டறை உதவியாளர் பணியிடத்துக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 6 மாத கால இருட்டறை உதவியாளர் பயிற்சி சான்று அல்லது பிளஸ் 2 தேர்ச்சி, ஓராண்டு இருட்டறை உதவியாளர் பயிற்சி சான்று பெற்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
கடந்த 2013 ஜூலை 1ஆம் தேதியன்று, முற்பட்ட வகுப்பினர் 30 வயதுக்கும், மிகவும் பிற்பட்டோர், பிற்பட்டோர் மற்றும் முஸ்லிம் 32 வயதுக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்கும் உள்பட்டு இருக்க வேண்டும். முற்பட்ட வகுப்பினர் நீங்கலாக, இதர வகுப்பினர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால், வயது உச்சவரம்பு இல்லை.
பதிவு மூப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014, ஜூலை 3ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள முன்னுரிமை பதிவுதாரர்கள், 2012, டிசம்பர் 17ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள ஆதிதிராவிடர் அருந்ததியர் வகுப்பு பெண்கள், 2009, செப்டம்பர் 24ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள பிற்பட்ட முஸ்லிம் வகுப்பு பெண்கள், 2010, அக்டோபர் 5ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள ஆதிதிராவிடர் அருந்ததியர் வகுப்பு ஆண்கள், 2010, மார்ச் 1ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள மிகவும் பிற்பட்டோர், 2008, மே 7ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள பழங்குடியினர், 2007, அக்டோபர் 12ஆம் தேதி வரை பதிவு செய்துள்ள இதர வகுப்பினருக்கு, உத்தேச வேலைவாய்ப்பு பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பதிவு மூப்புதாரர்கள் ஜூலை 11ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு உரிய சான்றிதழ்களுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று, தங்களது பதிவு மூப்பு பரிந்துரையை உறுதி செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.