தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
இதுகுறித்து பல்கலைக்கழகக் கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சி. சுந்தரேசன் தெரிவித்திருப்பது:
இந்தப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி சார்பில் மே மாதத்தில் தேர்வுகள் நடைபெற்றன. இதில், முதுநிலை சுற்றுச்சூழல் அறிவியல், முதுநிலை வணிகவியல் முதலாமாண்டு, முதுநிலை வரலாறு முதலாமாண்டு, முதுநிலை ஆங்கிலம் முதலாமாண்டு, இளநிலை இலக்கியம் இரண்டாமாண்டு, இளநிலை தமிழிசை முதலாமாண்டு, இரண்டாமாண்டு, இளநிலை வரலாறு இரண்டாமாண்டு, பட்டயம் தொடு சிகிச்சை, பட்டயம் யோகா ஆசிரியர் பயிற்சி, பட்டயம் கோவில் அர்ச்சகர் பயிற்சி, சான்றிதழ் தொடு சிகிச்சை, பட்டயம் யோகா ஆசிரியர் பயிற்சி, பட்டயம் கோவில் அர்ச்சகர் பயிற்சி, சான்றிதழ் தொடு சிகிச்சை, சான்றிதழ் வள்ளலார் சிந்தனைகள் ஆகிய தேர்வுகளுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
இந்த முடிவுகளை www.tamiluniversity.ac.in, www.tamiluniversitydde.org என்ற இணைதள முகவரியில் மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.