WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 8, 2014

ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்பினால் மாணவர்களுக்கு பயன்.

கூடலூர் :
"தேவர்சோலை அரசு மேல் நிலைப் பள்ளியின் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. தேவர்சோலை அரசு மேல் நிலைப் பள்ளி பி.டி.ஏ., தலைவர் குஞ்சுமுகமது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு: தேவர்சோலை அரசு பள்ளியில், 7 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில் 75 சதவீதமும், 10ம் வகுப்பு தேர்வில் 88 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதற்கு, சக ஆசிரியர்களின் முயற்சி முக்கிய காரணமாகும். இந்த கல்வியாண்டில், மேல்நிலை பிரிவில் தமிழ், ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் இல்லை; பட்டதாரி ஆசிரியர்கள் அவர்களுக்கும் பாடம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் மாற்று பணி மூலம் வேறு பள்ளிக்கு அனுப்பியுள்ளதால், பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் நிலையுள்ளது. இரவு காவலரும் மாற்றுப் பணிக்கு அனுப்பபட்டுள்ளதால், இரவில், பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை தடுக்க முடியாத நிலையுள்ளது. எனவே, ஆசிரியர்கள், காவலரின் மாற்றுப் பணியை ரத்து செய்து, இப்பள்ளியில் பணியாற்றவும், காலி பணியிடங்களை நிரப்பவும் நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குஞ்சுமுகமது கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.