WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 9, 2014

நல்லாசிரியர் விருது கல்வித்துறை உத்தரவு!

கல்வித்துறையில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, ஆண்டு தோறும்
டாக்டர் ராதாகிருஷ்ணன் (நல்லாசிரியர்) விருது வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள் ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படுகிறது. இவ்விண்ணப்பங்களை மாவட்டக்குழு பரிசீலித்து, மாநிலக்குழுவுக்கு அனுப்புகிறது. நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கான தகுதி குறித்து முக்கிய நிபந்தனைகளை, பள்ளி கல்வித்துறை விதித்துள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரி யரின் பணிபதிவேடு, முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான ஆய்வுக்குழு, ஆசிரியர் பணிசெய்யும் பள்ளிக்கு நேரில் சென்று, அவரது செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். ஆசிரியர் மீது எந்த குற்றச்சாட்டும், வழக்கு நடவடிக்கையும் இருக்க கூடாது. பொதுவாழ்வில் தூய்மை, மாணவர் இடைநிற்றலை குறைத்தல், மாணவர் சேர்க்கை, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல், கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டவராக இருத்தல் அவசியம். அரசியலில் பங்குபெற்ற, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களை, கண்டிப்பாக விருதுக்கு பரிந்துரைக்க கூடாது. தகுதியான ஆசிரியர்களிடம் நேர்காணல் நடத்திய பின், அவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், வரும் ஆக. 10ம் தேதிக்குள், மாநிலக்குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும், என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.