WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 29, 2014

14,700 புதிய ஆசிரியர்களுக்கு நாளை முதல் பணி நியமனம்

புதிதாக தேர்வு பெற்ற, 14,700 ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு
வழங்குவதற்கான கலந்தாய்வு, நாளை முதல், 'ஆன்லைன்' வழியில் நடக்கிறது. நேற்று, பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, ஏழு பேருக்கு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன ஆணையை வழங்கினார்.

இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்ட அறிவிப்பு:

முதுகலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கான கலந்தாய்வு, 30ம் தேதியும் (நாளை), ஒரு மாவட்டத்தில் இருந்து, வெளி மாவட்டத்தில் சேர்வதற்கு, 31ம் தேதியும் கலந்தாய்வு நடக்கும்.இடைநிலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கு, செப்., 1ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு, செப்., 2ம் தேதியும் கலந்தாய்வு நடக்கும்.

பட்டதாரி ஆசிரியர், மாவட்டத்திற்குள், செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களில், பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4, 5ம் தேதிகளிலும் நடக்கும். தேர்வு பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், தேர்வுக் கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன், இருப்பிட முகவரி சம்பந்தபட்ட மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு மையத்திற்கு, சம்பந்தபட்ட நாட்களில், காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.