WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 28, 2014

ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு 30-ம் தேதி ஆரம்பம்:மாலைமலர்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2353 முதுகலை ஆசிரியர்கள், 10698
பட்டதாரி ஆசிரியர்கள், 1649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 14700 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பணி வழங்குவதற்கான கலந்தாய்வு வரும் 30-ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதுகலை ஆசிரியர்களுக்கான
கலந்தாய்வு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 30-ம் தேதியும்,
வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 31-ம் தேதியும் நடைபெறும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு
மாவட்டத்திற்குள் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் முதல் தேதியும்,
வேறு மாவட்டங்களில் உள்ள பணியிடங்களுக்கு 2-ம் தேதியும்,
பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தவரை,
மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதியும்,
வேறு மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 32 மையங்களில் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.