அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல், சட்டக் கல்லூரிகளில் விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு விண்ணப்ப வினியோகம், சி.இ. ஓ., அலுவலங்களில் வினியோகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு கலை அறிவியல், பொறியியல், சட்டக்கல்லூரிகளில் காலியாக இருக்கும் 200க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர், விரிவுரையாளர்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் நியமிக்க, உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆக.,20 முதல் செப்.,15 வரை, ரூ.100 கொடுத்து விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். முதன்மைக் கல்வித்துறையினர் கூறுகையில், "அரசு கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அடுத்த வாரம் வரலாம், என எதிர்பார்க்கிறோம். கூடுதல் விவரங்களை டி.ஆர்.பி.,இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்,” என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.