WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 24, 2014

33 நாட்களில் செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான்

இன்னும், 33 நாட்களில், மங்கள்யான் விண்கலம், செவ்வாய் சுற்று வட்டப்
பாதையை அடையும்' என, இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ சார்பில், கடந்தாண்டு நவம்பரில், மங்கள்யான் விண்கலம், பி.எஸ்.எல்.வி.சி., 25 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்த மாதம், 24ல், இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையை சென்றடையும் வகையில், விஞ்ஞானிகள் திட்டம் வகுத்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரோ, 'பேஸ்புக்' பக்கத்தில், இதுகுறித்து தகவலை வெளியிட்டுள்ளது. அதில், 'மங்கள்யான் விண்கலம், செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, 90 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ளது. சுற்று வட்டப் பதையை சென்றடைய, இன்னும், 33 நாட்களே உள்ளன. அதேநேரத்தில், பூமியிலிருந்து, 1,890 லட்சம் கி.மீ., தொலைவில், மங்கள்யான் விண்கலம் உள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.