தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்ட நர்சரி பள்ளிகளை மூடப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீல் சுப்பிரமணி என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மழலையர் (நர்சரி) பள்ளிகள் உள்ளது. இவை அங்கிகாரம் பெறாமல் செயல்படுகிறது. இந்த பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்து கொண்டு, பிளே ஸ்கூல் என்ற பெயரிலும் பள்ளிகளை நடத்தி வருகிறது. 5 வயதிற்கும் குறைவான குழந்தைகளை இந்த பள்ளிகளில் சேர்க்கிறார்கள். சென்னையில் மட்டும் அங்கீகாரம் பெறாத 760 நர்சரி மற்றும் பிளே ஸ்கூல்கள் பள்ளிகள் செயல்படுகிறது.
இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அரசுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.கல்விக்குயில் மேலும் இப்பள்ளிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும். அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட கோர்ட் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் பால் வசந்தகுமார், ரவிசந்திர பாபு ஆகியோர் விசாரித்து 2 வாரத்தில் தமிழக அரசு மற்றும் 760 பள்ளிகளும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதை தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.கல்விக்குயில்அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, மழலையர் பள்ளிகள் மீது அரசு மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
பின்னர் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கிருஷ்ணகுமார் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாதாடும் போது, அங்கீகாரம் பெறாமல் செயல்படும் நர்சரி பள்ளிகள் மூடப்படும். அதற்காக, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.கல்விக்குயில் செப்டம்பர் 14ம் தேதிக்குள் அங்கீகாரம் பெறாத மழலை பள்ளிக்கு நோட்டீஸ் கொடுக்கவும், அக்டோபர் 15ம் தேதிக்குள் விளக்கம் பெறவும், நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள் தொடக்க கல்வி அதிகாரிகள் பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய அங்கீகாரம் பெறாவிட்டால் அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசு விதித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத பள்ளிகளை ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் மூட உத்தரவிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2011&2012ம் கல்வி ஆண்டு அங்கீகாரம் பெறாத 1459 மழலையர் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தொடர்ந்து மற்ற அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூடப்படும். அதற்கான நடவடிக்கை எடுப்போம் என்றார்.
இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, அரசே அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுப்பதால் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை.
வழக்கை முடித்து வைக்கிறோம் என்று தீர்ப்பு கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.