மருத்துவ சார்நிலை பணிக்கு, நேர்காணலுக்கு தேர்வானோர் பட்டியல்
டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய ஊரக சுகாதாரப் புள்ளியிலாளர் பதவிக்கான 49 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பொருட்டு தேர்வாணையத்தால் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் வருகிற 19ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது.
நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 101 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணைய தளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வுக்கான நேரம் குறித்த தகவல் உள்ளடக்கிய அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இருந்து அழைப்பாணையை பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.www.kalvikkuyil.blogspot.com
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.