WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 25, 2014

கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் 89,382 பேர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார்
பள்ளிகளில் இந்த ஆண்டு 89,382 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கடந்த ஆண்டை விட  39 ஆயிரத்து 518 பேர் கூடுதலாக பயனடைந்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி (ஆர்டிஇ) கீழ் 25 சதவீதம் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற உத்தரவு கடந்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இதன்படி மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளில் இந்த குறிப்பிட்ட 3 வகுப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர் களுக்குரிய கல்விக் கட்டணத்தை மத்திய அரசு வழங்குகிறது. கடந்த ஆண்டு இச்சட்டம் தொடர்பாக அதிக விழிப்புணர்வு இல்லாததால் குறைந்த எண்ணிக்கையிலேயே ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்ட னர். இதையடுத்து இந்த கல்வி ஆண்டு தொடக்கம் முதலே இச்சட்டத்தை அனைத்துப் பள்ளிகளும் முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது. 

இது தொடர்பாக மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மற்றும் கல்வி அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளுக்கு சென்று கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டதன் விவரம் குறித்து நேரடியாக ஆய்வு நடத்தினர். இதன் எதிரொலியாக இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்து 452 தனியார் பள்ளிகளில் 89 ஆயிரத்து 382 மாணவர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர்.இதில் மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் 3 ஆயிரத்து 642 பள்ளிகளில் 42 ஆயிரத்து 586 பேரும், தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள 5,441 தனியார் பள்ளிகளில் 43 ஆயிரத்து 837 பேரும், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள 369 பள்ளிகளில் 2 ஆயிரத்து 959 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு அனைத்து தனியார் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 49 ஆயிரத்து 864 பேர் மட்டுமே ஆர்டிஇ சட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டு பயனடைந்தனர். 

இந்த ஆண்டு கூடுதலாக 39 ஆயிரத்து 518 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் முழு அளவில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை. இதனிடையே கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணம் சுமார் 35 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்படாததால் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் அதிருப்தியடைந்துள்ளனர். இவர்களுக்கு சேர வேண்டிய நிதியை வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.