WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 25, 2014

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி
சேர்க்கையில், கடந்தாண்டை விட, நடப்பு கல்வியாண்டில் 4,331 மாணவர்கள் அதிகரித்திருப்பதாக, கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை சரிவதை தடுக்க, ஆங்கில வழிக்கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆங்கில வழிக்கல்வி மீதுள்ள ஆர்வத்தால், கடந்தாண்டை விட நடப்பு கல்வியாண்டில், பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 883 அரசு துவக்கப்பள்ளிகள், 267 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. கடந்தாண்டு 45 துவக்கப்பள்ளிகளிலும், 57 நடுநிலைப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில், துவக்கப்பள்ளிகளில் 1,457, நடுநிலைப்பள்ளிகளில் 1,279 என மாணவர்கள் எண்ணிக்கை இருந்தது. நடப்பு கல்வியாண்டில், 83 துவக்கப்பள்ளிகளிலும், 98 நடுநிலைப்பள்ளிகளிலும், மொத்தமாக 7,067 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட 4,331 பேர் அதிகம். கடந்தாண்டை விட மாணவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.எனினும், ஆங்கில வகுப்புகளுக்கென கூடுதல் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் முழுமையாக பயனடைவதில்லை, அவ்வகுப்புகளுக்கென ஆசிரியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டால் மட்டுமே மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கச் செய்ய முடியும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அரசுப்பள்ளிகளில் ஆங்கில வகுப்பு துவங்கியதால், பெற்றோர் பெரிதும் ஆர்வம் காட்டி, கடந்தாண்டில் குழந்தைகளை சேர்த்தனர். ஆங்கில வகுப்பு துவங்கிய ஆண்டே, அவ்வகுப்புகள் நடத்த கூடுதலாக ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இக்கல்வியாண்டி லாவது ஆங்கில வகுப்புக்கு என தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற எதிர்ப்பார்ப்பில், ஆங்கில வழி வகுப்புகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தற்போது ஆங்கில வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு, போதியளவு ஆங்கில பயிற்சி இல்லாததால், மாணவர்களுக்கு ஆங்கில அறிவை சரியாக வழங்க முடியாமல் திண்டாடுகின்றனர். அவர்களுக்கு முழுமையான பயிற்சியும், ஆங்கில வகுப்பு நடத்த கூடுதலாக ஆசிரியர்களும் நியமிக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ""ஆங்கில வழிக்கல்வி முறை பெற்றோரிடமும், மாணவர்களிடமும் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆங்கில வழிக்கல்வியில் படிக்க மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.