WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 11, 2014

பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு -- தி இந்து

ஆசிரியர் தகுதித்தேர்வில் (தாள்-2) தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு
சென்று வந்த  43 ஆயிரம் பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களின் இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெளியிட்டது. தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தெரி்ந்துகொள்ளலாம். பணிநியமன ஆணை, தேர்வர் கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அல்லது தொடக்கக்கல்வித்துறை மூலம் விரைவில் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித் துள்ளார்.
www.kalvikkuyil.blogspot.com
மேலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், வரலாறு, நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களுக் கான தேர்வுபட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. www.kalvikkuyil.blogspot.com

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.