WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 7, 2014

கேட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு.

காமன் அட்மிஷன் டெஸ்ட் (CAT) தேர்வுக்கு ஆக.,6ம் தேதி முதல் செப்.,30ம்
தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறந்த மேலாண்மை கல்லூரிகளிலும், ஐஐஎம்.,க்களிலும் முதுகலை பட்டம் பயில ஆண்டுதோறும் கேட் நுழைவுத்தேர்வை ஐஐம்-இந்தூர் நடத்தி வருகின்றது. அந்த வகையில் 2014 கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேட் நுழைத்தேர்வின் முறையை இந்தாண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன்பு செய்யப்பட்டுள்ள மாற்றங்களை சரிவர கவனித்து விண்ணப்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு எழுதும் மையத்தை, விண்ணப்பிக்கும் போது கவனமாக தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
கேட் தேர்வு 99 நகரங்களில் 354 மைய்யங்களில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.