WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 4, 2014

FLASH NEWS: முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும்

முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும்  கால 
தாமதத்தை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள் இன்று, ஆசிரியர் தேர்வு வாரிய
(டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையொட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான போட்டித்தேர்வை கடந்த ஜூலை மாதம் நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதனையொட்டி பல பாடப்பிரிவுகளுக்கு தேர்வு எழுதிய ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினார்கள். இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் பாடத்திற்குரிய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் பணி ஆணை வழங்கப்பட்டுவிட்டது. மேலும் விலங்கியல், உயிரி வேதியியல் (பையோ கெமிஸ்ட்ரி), மனை அறிவியல் (ஹோம் சயின்ஸ்), புவியியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகிய 5 பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அந்த பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அவர்களுக்கும் பணி உத்தரவு வழங்கப்படவில்லை.மற்ற பாடங்களுக்கு உரிய ஆசிரியர் தேர்வு பட்டியல், கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தும், சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டன.

இதையடுத்து ஒரு வாரத்திற்குள் முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியல் வெளியிடப்படும் என டி.ஆர்.பி. வட்டாரம் கடந்த ஜூலை மாதம் 15 தேதி தெரிவித்தது. மூன்று வாரமாகியும் இதுவரை எந்த ஒரு முடிவும் வெளியிடப்படவில்லை. இதனால் தேர்வர்கள் ஆவேசம் அடைந்தனர். இதைக்கண்டித்து 100 க்கும்மேற்பட்ட தேர்வர்கள் இன்று தேர்வு வாரியத்தை முற்றுகை யிட்டனர். 

இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: ஒரே போட்டித் தேர்வில், குறிப்பிட்ட பாடத்தை சேர்ந்தவர்கள் மட்டும், பணி நியமனம் பெற்று உள்ளனர். எங்களுக்கு இன்னும், தேர்வு இறுதி பட்டியலையே வெளியிடாமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. அதுபோல், சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஆசரி யர்க ள், ஏற்கெனவே பணிபுரிந்த தனியார் பள்ளிகளால் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, அரசு பணியும் கிடைக்காத நிலையில் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதுகுறித்து., டி.ஆர்.பி  அதிகாரிகளிடம் கேட்டபோது, " முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என தெரிவித்தனர். இதில்
மறுமதிப்பீடு இல்லாத பாடங்களுக்கு  ஆகஸ்டு 14 தேதிக்குள்ளாக  இறுதி பட்டியல் வெளியிடப்படுவதாகவும் மறுமதிப்பீடு பாடங்களுக்கு ஆகஸ்டு 19 ம் தேதிக்குள்ளாக திருத்தப்பட தேர்வு முடிவு வெளியிடப்படும் என  ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ௥ க்கான தேர்வு பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர்.

12 comments:

  1. Is it believable or fake deas friends because we heared such assuarance so many times. Anyway thaks to kalvikkuyil.e

    ReplyDelete
  2. Hello sir it's true news because today our pg friends going to trb then fight aganist final list its true news my friends also going to trb today thanks to kalvikkuyil making fast news about pg

    ReplyDelete
  3. Mr.epselva good evening. What happened in TRB office. Can u explain it?.When they will arrange CV for new entries?. Any Idea?

    ReplyDelete
  4. Its clearly explained kalvikkuyil above the news my friend also explained the same but revaluation results list will published above 19th this month its will happened today trb office

    ReplyDelete
    Replies
    1. sir, do u know for which subjects there will be revaluation?kindly reply

      Delete
    2. Mr.Thangavel revaluation subjects in pg are physics,commerce, economics that's all friend

      Delete
  5. Is there any additional post in PG TRB bec of backlog vacancies. TET ku additional post indru arivithathu pol PG TRB kum arivippu varuma. Please sollunga.

    ReplyDelete
  6. MR VG chance very less because suppose vacant list maybe added next academic year 14-15 not 12-13.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your reply sir. Appo CV MUDICHAVANGA ELLARUKUM POSTING KIDAIKUMA kidaikatha

      Delete
    2. Surly got jobs for all cv completely candidates.

      Delete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.