WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 1, 2014

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகளில் குளறுபடி

திருவள்ளுவர் பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவு குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவி கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் 118 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. பல்கலைக்கழகம் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தொடர்ந்து குளறுபடிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் கடந்த 26-ம் தேதி வெளி யிடப்பட்டது. இளநிலை இறுதி யாண்டு, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான முடிவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
குறிப்பாக இறுதி செமஸ்டர் தேர்வு தாள்களுக்கான முடிவுகள் வெளியிடவில்லை. இரண்டு அல்லது மூன்று தாள்களுக்கான முடிவுகள் மட்டும் வெளியிட்டுள்ள னர். இறுதி ஆண்டு மாணவர்கள் எழுதிய தோல்வி அடைந்த பாடங்களுக்கான முடிவுகள் வெளியிடவில்லை. வேலூர் ஊரீசு கல்லூரியில் பி.பி.ஏ இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. 
நான்கு மாவட்டங்களில் உள்ள இறுதியாண்டு மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆனால், பல்கலைக்கழகத்தில் பதில் சொல்ல சரியான ஆட்கள் இல்லாத தால் மாணவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். பி.எட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆன்-லைனில் பதிவு செய்யும் தேதி இன்றுடன் முடிவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
இந்நிலையில், சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை முற்றுகையிட்டு தேர்வு முடிவு எப்போது முழுமை யாக வெளியிடப்படும் என்றும் மறு மதிப்பீட்டு முடிவுகளை எப்போது அளிப்பீர்கள் என பல்கலைக்கழக ஊழியர்களை கேள்விகளால் துளைத்தெடுத்தனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஊழியர் கள் திணறினர். பின்னர், மாணவர் களிடம் இருந்து கோரிக்கை மனுக் களை பெற்றுக்கொண்டனர். இவர் களில் 50-க்கும் மேற்பட்ட மாணவர் கள் பல்கலைக்கழகம் எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், திருவலம் போலீஸார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர். 
இது தொடர்பாக திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் குணசேகரன் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘மாணவர்களுக்கு முடிவுகள் சரியான நேரத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்தோம். பி.எட் படிப்பில் சேருவதற்கான தேதி முடியும் நிலையில் திருவள்ளு வர் பல்கலைக்கழக முடிவுகள் வெளியானது. இதனால், கல்வியி யல் பல்கலைக்கழக துணைவேந்த ரிடம் ஆலோசனை நடத்தி பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டது. தேர்வு முடிவு களில் குறை இருந்தால் திருத்திக் கொடுக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் அந்தந்த கல்லூரிகளில் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். 
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முற்றுகையிட்ட மாணவ, மாணவிகள். அடுத்த படம்: பல்கலைக்கழகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். 


1 comment:

  1. thiruvallvar unversity workesum trb workesum thitta varthai illai athanal sabikiren.
    avaga pasanglu inga padichi
    trb la pass aai
    yengalapolave vina poganum.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.