WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 23, 2014

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,முதல்நிலைத் தேர்வு: நாளை(ஞாயிறு) நடைபெறுகிறது!

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,
உள்பட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வினை 84 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். மாநிலத்தில் மூன்று இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறவுள்ளது.      சென்னையில், 61 ஆயிரம் பேரும், மதுரையில் 12 ஆயிரத்து 655 பேரும், கோவையில் 10 ஆயிரத்து 345 பேரும் முதல்நிலைத் தேர்வினை எழுதுகிறார்கள். காலை 9.30 முதல் 11.30 மணி வரையில் முதல் தாளும், பிற்பகல் 2.30 முதல் 4.30 வரையில் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறுகின்றன. சென்னையில் 145 தேர்வு மையங்களும், கோவையில் 22 மையங்களும், மதுரையில் 20-க்கும் மேற்பட்ட மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செல்போன், பேஜர்கள் உள்பட எந்தவித நவீன மின்னணு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்குள் எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.    மேலும், ஒவ்வொரு மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தேர்வினை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.