லண்டன் : உலகம் முழுவதும் உள்ள 31 நாடுகளைச் சேர்ந்த 700
பல்கலைக்கழகங்களின் ரேங்க் பட்டியல் இன்று லண்டனில் வெளியிட்டப்பட்டது. அதில் முதல் 200 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்று கூற இடம்பெறவில்லை. கடந்த முறை இந்த பட்டியலில் 12 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது 11 கல்வி நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
மும்பை ஐ.ஐ.டி., 222 வது இடத்தையும், டில்லி ஐ.ஐ.டி 235 வது இடத்தையும், கான்பூர் ஐ.ஐ.டி., 300 வது இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி., 322 வது இடத்தையும், காரக்பூர் சென்னை 324 வது இடத்தையும் பெற்றுள்ளன. இப்பட்டியிலில் 400 வது இடத்திற்கு கீழ், டில்லி பல்கலைக்கழகம், ரூர்கி ஐ.ஐ.டி., கவுகாத்தி ஐ.ஐ.டி., -, மும்பை பல்கலைக்கழகம், கோல்கட்டா பல்கலைக்கழகம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் ஹார்வே ர்டு பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஸ்டேன் போர்டு, கால்டெக், பிரின்சிடென், யேல் பல்கலைக்கழகங்கள் முதல் 10 ரேங்க்களுக்குள் வந்துள்ளன. அமெரிக்காவின் 51 கல்வி நிறுவனங்கள், இங்கிலாந்தின் 29 நிறுவனங்கள், ஜெர்மனியின் 13 நிறுவனங்கள், நெதர்லாந்தின் 11 நிறுவனங்கள், கனடாவின் 10 நிறுவனங்கள், ஜப்பானின் 10 மற்றும் ஆஸ்திரேலியாவின் 8 கல்வி நிறுவனங்கள் முதல் 200 இடங்களுக்குள் தேர்வாகி உள்ளன.
ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை., பெரும்பாலான மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும், உலகில் உள்ள பல பணக்கார கல்வி நிறுவனங்களை காட்டிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தரமான ஆய்வு நடத்தப்படுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆராய்ச்சி, கற்பித்தல், வேலைவாயப்பு மற்றும் சர்வதேச தரம் ஆகியவற்றை வைத்து, கல்வி நிறுவனங்களின் தரம் கணக்கிடப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.