ஈஎஸ்எல்சி பொதுத் தேர்வு செப்டம்பர் 2014 - தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், செப்டம்பர் மாதம் நடைபெறும் ஈ.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு எழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கபட்ட நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 18.09.2014 (வியாழக் கிழமை) முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
www.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று “ESLC SEPTEMBER 2014 EXAMINATION - HALL TICKET” என்ற வாசகத்தினை கிளிக் செய்து அதில் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இத்திட்டத்தில் விண்ணப்பித்தத் தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.