WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 12, 2014

சென்னை பல்கலை தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு..


                    
சென்னை : சென்னை பல்கலையின், தொலைதூர கல்வி மையம் சார்பில்,
பல்வேறு படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. இதுகுறித்த பல்கலை செய்தி: கடந்த ஜூனில், பல்கலையின் தொலைதூர கல்வி மையம் சார்பில், எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,), நூலக இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள், இன்று இரவு, 8:00 மணிக்கு, பல்கலையின், 'www.ideunom.ac.in, www.unom.ac.in' ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்படும். இதில், ஏ11,12,13, சி,12 மற்றும், 13 ஆகிய எண்களில் துவங்கும் சேர்க்கை எண் கொண்ட எம்.சி.ஏ., மாணவர்கள்; ஏ12 மற்றும் சி13 ஆகிய துவக்க எண்களை கொண்ட, எம்.எஸ்சி., (ஐ.டி.,); ஏ 13 துவக்க எண்ணை கொண்ட, நூலக இளங்கலை, முதுகலை மாணவர்கள், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கு, ஒரு தாளிற்கு, 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்கள், பல்கலையின் இணைய தளத்தில், மறுமதிப்பீட்டிற்கு பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க, 19ம் தேதி இறுதி நாள். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.