பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்காக சிறப்பு அனுமதித் திட்டத்தின்
கீழ் விண்ணப்பித்தவர்கள் வெள்ளிக்கிழமை (செப்.12) முதல் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் மூலம் விண்ணப்பித்தவர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தங்களது பிறந்த தேதியையும், விண்ணப்ப எண்ணையும் பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஏற்கெனவே இந்தத் தனித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யாதவர்களும், இப்போது தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.