WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 2, 2014

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட கவுன்சலிங் நாளை தொடங்குகிறது

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள தேர்வு  பட்டியலில்
இடம்பெற்றுள்ள 10,444 பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பணிநியமன கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடத்தப்படவுள்ளது.  அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உள்ள  பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம்  மூலம் நேரடி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) நாளை காலை 9  மணி முதலும், வேறு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு  வரும் 4ம் தேதி மற்றும் 5ம் தேதிகளில் காலை 9 மணி முதலும்  இணையதளம் வாயிலாக பணிநியமன ஆணை வழங்கப்படவுள்ளது.  கலந்தாய்வுக்கு வருபவர்கள், ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள  இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில் கலந்தாய்வு நடக்கும்  நாட்களில் கல்வி சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவு  கடிதத்துடன் கலந்து கொள்ளவேண்டும். 

சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் மதுரை  மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாததால்  இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நாளை நடைபெறும் கலந்தாய்வில்  கலந்து கொள்ளாமல், வேறு மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்  காலிப்பணியிடங்களுக்கு 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறும்  கலந்தாய்வில் கலந்து கொண்டு பணிநியமன ஆணையினை பெற்று  கொள்ளலாம்.

8 comments:

  1. B.T teachers epo school la join panradhu nu endha arivipum varalaya?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே பணி நியமன ஆணை பெற்ற உடன் பள்ளியில் சேர வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உங்களுக்கு தெரிவிப்பார்.
      மேலும் தற்போது நீங்கள் வேறு அரசு பணியாற்றுபவர்கள் என்றால் அதற்க்கான முறையான NOC பெற்ற பிறகே பணியில் சேரவேண்டும்.

      Delete
  2. Hi KK friends good morning how u to all then all selected candidates joined school what about your school if u done mind share here

    ReplyDelete
  3. Hi friends, so sorry for the late replay i got appointment order to puthukottai district. Hellow bharathi sir, epselva, yathav, gowthamg, rksusi and poongodi madam this is my kind request pleaae be in touch with our web site kk. Our friendship should be lasting for a long time not till joined in the concerned schools. We r all in one family ie kalvikkuyil family.

    ReplyDelete
    Replies
    1. S mr ps sir i am always stay with kk family

      Delete
    2. YES me too..!!! ALL Friends keep in touch...PLS..!!

      Delete
  4. All my kk friends i have got appoinment order and joined my own district,all my fnds keep in touch and my thanks to kalvikuyil

    ReplyDelete
  5. Tamil medium quota vacancy fill up panniyaachcha

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.