WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 4, 2014

உதவி பேராசிரியர் நியமனம் மதிப்பெண் பட்டியல் வெளியீடு!!

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள
உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்பட்ட, நேர்முகத் தேர்வின் மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டது. தமிழக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இவற்றை நிரப்ப ஆசிரியர் தேர்வாணையம், பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தியது. இதற்கு, 14,500க்கும் மேற்பட்டோர் விண்ணபப்பித்த நிலையில், அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பின், ஆக., 25 28 ம் தேதிகளில், ஒரு பணிக்கு ஐந்து பேர் என்ற விகிதத்தில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இதில் அவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண் பட்டியல், நேற்று ஆசிரியர் தேர்வாணையத்தின் இணைய தளமான, www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.