WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 10, 2014

அறிவியல் உதவியாளர் பதவிக்கான நேர்காணல்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள  அறிக்கை:
தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலை பணியில் அடங்கிய  அறிவியல் உதவியாளர் நிலை-2 பதவிக்கான விண்ணப்பதாரர்களை  தேர்வு செய்யும் பொருட்டு, நேர்காணல் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட  விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல்  நடத்தப்படவுள்ளது.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 33, விண்ணப்பித்தவர்கள் 3847 பேர்.  எழுத்து தேர்வில் பங்கேற்றவர்கள் 1903. தேர்வு முடிவுகள் இந்த மாதம்  1ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்  நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 69 பேர். 

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17, 18ம் தேதியிலும்,  நேர்காணல் வரும் 18 மற்றும் 19ம் தேதிகளிலும் நடைபெறும்.  சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட  விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு கடிதம் தனிதனியாக விரைவு அஞ்சல்  வழியாக அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.