அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.
வங்கக் கடலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாள்களாக மழை பெய்து வந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்துள்ளதால் தமிழகத்தில் மழை நிற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரமணன் கூறியது: வங்கக் கடலில் தமிழகம்-இலங்கை கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை முற்றிலும் மறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மழை குறைந்துள்ளது.
ஆனால் தென்கிழக்கு அரபிக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வங்கக் கடலில் இருந்து ஈரப்பதமான காற்றினை இழுக்கும். அவ்வாறு ஈர்க்கும் போது, அந்த காற்று தமிழக நிலப்பகுதி வழியாக செல்லும். அப்போது தமிழகம் முழுவதும் மழை பெய்யும். அதனால் புதன்கிழமையும் மழை பெய்யும்.
அதேவேளையில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான நிலவரப்படி பழனியில் 200 மி.மீ. மழையும், சத்திரப்பட்டியில் 150 மி.மீ. மழையும் பெய்துள்ளது. மயிலாடுதுறையில் 120 மி.மீ. மழையும், குடவாசில் 110 மி.மீ. மழையும் பெய்துள்ளது. ஒட்டபிடாரத்தில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் 30 மி.மீ. மழை பெய்துள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.