உலகிலேயே இந்தியாவில்தான் இணையம் மற்றும் ஸ்மார்ட் போன் மோகம் கொண்டவர்கள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த பி2எக்ஸ் கேர் சொல்யூஷன்ஸ் எனும் ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர் சேவை நிறுவனம் நடத்திய அந்த ஆய்வு 57 சதவீத இந்தியர்களால் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது எனத் தெரிவிக்கிறது. இந்தியர்களில் மூன்றில் ஒருவர் ஒரு வார காலம் டிவி இல்லாமல் கூட இருக்கத்தயார் ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாமல் இல்லை என ஆய்வின் போது தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் முன்னிலையில் இருக்கும் இந்தியா, பிரேசில், அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியா, பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஸ்மார்ட் போன் பழுதானால் அது சரியாக 8 மணி நேரத்துக்கும் குறைவாகவே காத்திருக்கும் தன்மை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு முடிவு சரியாக இருக்கிறதா என்று நீங்களேகூட உங்களை வைத்து சோதித்துப் பார்க்கலாம்!
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.