WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 4, 2014

சென்னையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழா நாளை மாலை 5-30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறுகிறது. கவர்னர் கே.ரோசய்யா கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார். நேரடியாக 80 பேர் பட்டம் பெறுகிறார்கள். தங்கபதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை பலர் பெறுகிறார்கள். நேரடியாகவும், விழாவுக்கு வராமலும் சேர்த்து மொத்தத்தில் 69 ஆயிரத்து 500 பேர் பட்டம் வாங்குகிறார்கள்.

விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கலந்துகொண்டு பேசுகிறார். தேசிய கல்விதிட்டம் மற்றும் நிர்வாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.கோவிந்தா பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

இந்த தகவலை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.