தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் ஜெனார்த்தனன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு, ஊதிய குறை தீர் பிரிவின் பரிந்துரையை ஏற்று 2013ம் ஆண்டு தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு சாதாரண நிலை தர ஊதியத்தை திருத்தி அமைத்து உத்தரவிட்டது. ஆனால் கடந்த 1978-1979ம் ஆண்டு முதல், ஒரே பணித்தொகுப்பில் பணியாற்றி ஓய்வு பெறும் தொழில் கல்வி ஆசிரியர்கள் நிலை மிகவும் வேதனையாக உள்ளது. பட்டதாரி பணி நிலையில் உள்ள தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே நிதித் துறை செயலாளரின் 22.8.2014ம் தேதி கடிதத்தை திருத்தம் செய்து, பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வரும் தொழில் கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை தர ஊதியம் குறித்து தெளிவுரை வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.