ஸ்மார்ட் போனால் கெடும் தூக்கம்!
ஸ்மார்ட் போன்காள் ஏற்படும் பாதிப்பு பற்றிய புதிய ஆய்வு வெளியாகி
இருக்கிறது. படுக்கையறையில் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட் வைத்திருக்கும்
சிறார்களுக்குத் தூக்கம் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது. இந்த நவீன
சாதனங்களை பயன்படுத்தும் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடும்போது 21
நிமிடங்கள் குறைவாகத் தூங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெனிபர்பால்பே தலைமையிலான குழு
2,000 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இரவு
தூங்கச்செல்லும் முன் டிவி பார்ப்பதால் ஏற்படும் தூக்கப் பாதிப்பைவிட
ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் பிள்ளைகளிடம் அதிகப் பாதிப்பு இருப்பதாக
இந்த ஆய்வு தெரிவிக்கிறது. குறைந்தது இரவு தூங்கச்செல்லும் முன்
கேட்ஜெட்டுக்கு குட்பை சொல்லலாமே!
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.