தமிழக வனத் துறையில் காலியாகவுள்ள 200 வனவர்கள், கள உதவியாளர்கள் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு வனச் சீருடை பணியாளர்கள் தேர்வுக் குழுமம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக அரசின் வனத் துறை, வனக் கழகங்கள் ஆகியவற்றில் வனவர், கள உதவியாளர் பதவிகளில் 200 இடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, நெல்லை ஆகிய ஆறு இடங்களில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்றைய தினம் காலையில் பொது அறிவும், மதியம் பொது அறிவியல் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.
இந்த எழுத்துத் தேர்வுக்கு 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை www.forests.tn.nic.in, forest.examsonline.co.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தனது தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.