WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 18, 2015

கேமரா மூலம் 24 மணி நேர கண்காணிப்பு:தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு

'பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் விடைத்தாள் சேகரிப்பு, திருத்தும் மையங்களில் 24 மணி நேர கண்காணிப்பு கேமரா வசதி செய்ய வேண்டும்,'' என தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டார்.நாளை (மார்ச் 19) பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குவதையொட்டி திருச்சி, அரியலுார் உட்பட 23 மாவட்ட கல்வி அதிகாரிகள் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இயக்குனர் தேவராஜன் தலைமையில் இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

''விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் திருத்தும் மையங்களில் வசதிகள் செய்ய வேண்டும்,'' என இயக்குனர் தெரிவித்தார்.இணை இயக்குனர் உஷாராணி, முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஏற்பாடுகளை செய்தனர். பிளஸ் 2 வணிகவியல் தேர்வு விடைத்தாள்கள் பிரித்து கட்டுவதை இயக்குனர் பார்வையிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.